Memes: தீபாவளி பண்டிகை நெருங்கி விட்ட நிலையில் எங்கு திரும்பினாலும் மக்களின் கூட்டம் தான் இருக்கிறது. கேட்டா காசு இல்ல இல்லன்னு சொல்றாங்க. ஆனா துணியை மட்டும் ஆயிரம் கணக்குல எப்படிடா எடுக்குறீங்க என சிலரின் மைண்ட் வாய்ஸ் இருக்கிறது.
இன்னும் சிலர் போனஸ் போடுவாங்கன்னு நம்பிகிட்டு இன்னும் தீபாவளி பர்சேஸை ஆரம்பிக்காமல் இருக்கின்றனர். ஆனால் குடும்ப தலைவிகள் கணவர்களை சரவணா ஸ்டோர் போவோமா போத்தீஸ் போவோமா என நச்சரித்து வருகின்றனர்.
இப்படி தீபாவளி பண்டிகை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மனநிலையை கொடுத்திருக்கிறது. குழந்தைகள் என்ன பட்டாசு வாங்கலாம் என யோசித்து லிஸ்ட் போட்டு வைக்கின்றனர்.
ஆனால் நடுத்தர வர்க்கத்தின் குடும்ப தலைவர்களோ முதல்ல அடகு கடைக்கு தான் போகணும் என மனைவிகளின் நகைக்கு ஆப்பு வைக்கின்றனர். இதை நெட்டிசன்கள் வழக்கம் போல மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர்.
எல்லா கம்பெனிலயும் தீபாவளி போனஸ் ஒரு மாசம் சம்பளம், கார் என கொடுத்துகிட்டு இருக்காங்க. ஆனா நம்ம கம்பெனில லீவு கொடுக்கிறதே பெரிய விஷயமா இருக்கு.
அதேபோல் தீபாவளி ஸ்வீட் என்ற பெயரில் சோன்பப்படி டப்பாவும் குலோப் ஜாமுன் டப்பாவும் கொடுத்து வேலையை முடித்து விடுகின்றனர் சில கம்பெனியில். இதுவும் இப்போது சோசியல் மீடியாவில் கலகலக்க வைக்கும் மீம்ஸாக வைரலாகி வருகிறது.