வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

என்னம்மா சீனி தண்ணில சீடைய போட்டு வச்சிருக்க.. அது சீடை இல்ல நான் செஞ்ச குலோப் ஜாமுன், தீபாவளி மீம்ஸ்

Memes: நாளை மறுநாள் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இதற்காக அனைவரும் புது துணி, பட்டாசு என தயாராகிவிட்டனர். அதேபோல் இல்லத்தரசிகள் விதவிதமான பலகாரங்களை செய்து அடுக்கி வைத்திருக்கின்றனர்.

diwali-memes
diwali-memes

வழக்கமாக தீபாவளி என்றால் நம் நினைவுக்கு வருவது முறுக்கு தான். அதேபோல் அம்மாக்கள் அதிரசம், ரவா லட்டு என அசத்தி விடுவார்கள். இதற்கு ஈடாக ஒரு இனிப்பும் தவிர்க்க முடியாத பலகாரமாக மாறி இருக்கிறது.

diwali-memes
diwali-memes

அதுதான் குலோப் ஜாமுன். செய்வது மிகவும் எளிது என்பதால் இப்போதைய குடும்ப தலைவிகள் தீபாவளி என்றால் பாத்திரம் நிறைய இந்த ஸ்வீட்டை செய்து வைத்து விடுகின்றனர்.

diwali-memes
diwali-memes

சில நேரங்களில் இது சொதப்புவதும் உண்டு ஒன்று குலோப் ஜாமுன் சர்க்கரை பாகில் கரைந்து அல்வா போல் மாறிவிடும். இல்லையென்றால் கடிக்க முடியாதபடி இறுகிவிடும். பிள்ளைகள் எஸ்கேப் ஆனாலும் கணவர்கள் இதை சாப்பிட்டு தான் ஆக வேண்டும்.

diwali-memes
diwali-memes

இல்லை என்றால் தலைவியின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். அதனால் தீபாவளிக்கு ஆண்கள் கத்தி சுத்தியல் என ஆயுதங்களோடு பலகாரத்தை சாப்பிட தயாராக இருக்கின்றனர். இதை நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கிண்டல் அடித்து வருகின்றனர்.

diwali-memes
diwali-memes

அதில் சீனி தண்ணில எதுக்குமா சீடைய போட்டு வச்சிருக்க என கணவர் கேட்பதும் அது நான் செய்த குலோப் ஜாமுன் என மனைவி அதிர்ச்சி கொடுப்பதும் போன்ற மீம்ஸ் வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது. அதன் தொகுப்பு இதோ.

diwali-memes
diwali-memes

Trending News