Memes: இதோ அதோ என நான்கு ஐந்து நாட்களாக ஆட்டம் காட்டி வந்த ஃபெஞ்சல் புயல் ஒரு வழியாக கரையை கடந்து விட்டது. ஆனால் அதற்கு முன் மீடியாக்கள் கொடுத்த அலப்பறை கொஞ்ச நஞ்சம் கிடையாது.
முதலில் புயல் என்று சொன்னார்கள். அதன் பிறகு தற்காலிக புயல், புயலே கிடையாது எனக் கூறி கடைசியில் சனிக்கிழமை புயலாக மாறி கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
இதனால் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டது. ஆனாலும் நம் மக்கள் கடலின் சீற்றம் எப்படி இருக்கும் என பார்க்க பிள்ளை குட்டிகளோடு சென்றது தனி கதை.
அதையெல்லாம் தாண்டி நியூஸ் சேனல்கள் அதை அப்படியே படம் பிடிக்கிறேன் என கொடையுடன் செய்த காமெடி இப்போது சோஷியல் மீடியாவில் மீம்சாக பரவி வருகிறது.
புயல் வந்தால் கடற்கரையில் காத்து தான் அடிக்கும். பின்ன வீட்டுக்கு வந்து வெள்ளையா அடிக்கும் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். அதேபோல் இன்றும் மழை பெய்து கொண்டுதான் இருக்கிறது.
ஆனாலும் மக்கள் ரெயின் கோட்டை போட்டுக்கொண்டு மட்டன் சிக்கன் வாங்க கடைகளில் குவிந்து விட்டனர். மழை விடாம பெய்யுது பேசாமல் வீட்ல இருக்கலாம்ல, கல் நெஞ்சக்காரங்க கறிய வாங்க வந்துட்டாங்க என ஆடு கோழி மைண்ட் வாய்ஸ் மீம்ஸ் ஆக வைரல் ஆகி வருகிறது.