வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

என்னடா பெரிய லப்பர் பந்து.. ஹார்டு டிஸ்க் மட்டும் தொலையாம இருந்து இருக்கணும் அப்ப தெரியும், வைரல் மீம்ஸ்

Trending Memes: சமீப காலமாக கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி அதிக படங்கள் வெளிவருகிறது. அதில் இந்த வருட ஆரம்பத்திலேயே ஐஸ்வர்யா ரஜினி இயக்கத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் நடிப்பில் லால் சலாம் வெளிவந்திருந்தது.

lubbar pandhu-memes
lubbar pandhu-memes

கிரிக்கெட் கதைக்களமாக உருவான இப்படத்தில் சூப்பர் ஸ்டார் கெஸ்ட் ரோலில் நடித்து இருந்தார். அதனாலேயே பெரும் பரப்பரப்பை இப்படம் ஏற்படுத்தியது. ஆனால் படம் எதிர்பார்த்த அளவு போகவில்லை.

lubbar pandhu-memes
lubbar pandhu-memes

அதை தொடர்ந்து வந்த விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள முடியாத ஐஸ்வர்யா முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்ட ஹார்ட் டிஸ்க் தொலைந்து விட்டது. இல்லையென்றால் படம் வேற லெவலில் இருக்கும் என உருட்டினார்.

lubbar pandhu-memes
lubbar pandhu-memes

அதைத்தொடர்ந்து பல மாதங்களுக்குப் பிறகு இப்போது தான் அந்த ஹார்ட் டிஸ்க் அவர் கைக்கு வந்திருக்கிறது. இதனால் ஓடிடியில் பெரும் சம்பவம் இருக்கும் என அவர் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.

lubbar pandhu-memes
lubbar pandhu-memes

ஆனால் அதற்கு முன்பே அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் நடிப்பில் ரப்பர் பந்து வெளிவந்து பாராட்டுகளையும் புகழையும் தட்டிச் சென்றுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க நெட்டிசன்கள் என்ன பெரிய லப்பர் பந்து ஹார்ட் டிஸ்க் மட்டும் இருந்திருந்தா அப்ப தெரியும் என லால் சலாமை கலாய்த்து வருகின்றனர்.

lubbar pandhu-memes
lubbar pandhu-memes

அதேபோல் இன்னும் சில நகைச்சுவையான மீம்ஸ்களும் சோசியல் மீடியாவை சுற்றி வருகிறது. அதன் தொகுப்பு இதோ உங்களுக்காக.

lubbar pandhu-memes
lubbar pandhu-memes

சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆகும் காமெடியான மீம்ஸ்

Trending News