Memes: என்னதான் வேலைக்கு போய் செட்டில் ஆகி இருந்தாலும் பள்ளி கல்லூரி காலங்களை அவ்வளவு எளிதில் யாரும் மறந்து விட முடியாது. அதிலும் 90ஸ் கிட்ஸ்களுக்கு அது ஒரு பொற்காலம் என்று தான் சொல்ல வேண்டும்.
கல்லூரியை விட பள்ளி சென்ற நாட்களில் ஏராளமான மலரும் நினைவுகள் இருக்கிறது. அதில் P.E.T பீரியடை கடன் வாங்கி பாடம் எடுத்து டார்ச்சர் செய்வதில் பெரும்பங்கு கணக்கு வாத்தியார்களுக்கு உண்டு.
அதேபோல் ஏதாவது ஒரு டீச்சர் லீவ் எடுத்துவிட்டால் அந்த பீரியடிலும் கணக்கு பாடம் தான் நடக்கும். இப்படி ஒரு அனுபவம் அனைவருக்குமே இருந்திருக்கும்.
அதேபோல் ஆசிரியர் பாடம் நடத்தும் போது திடீரென வேறு டாபிக் பேசினால் இப்படியே நேரம் ஓடி விடாதா என மாணவர்கள் ஏங்கிய காலமும் உண்டு. அதிலும் சில முந்திரிக்கொட்டை மாணவர்கள் ஆசிரியர் மறந்து போனதை எடுத்துக் கொடுத்து நண்பர்களிடம் வாங்கி கட்டிக் கொள்வார்கள்.
இதை நெட்டிசன்கள் மீம்ஸ் ஆக போட்டு வைரல் செய்து வருகின்றனர். அப்படி பள்ளி பருவத்தில் மறக்க முடியாத சில மலரும் நினைவுகளின் மீம்ஸ் தொகுப்பு இதோ.
சோசியல் மீடியாவில் வைரலாகும் மீம்ஸ்
- இந்த வருஷமாவது தீபாவளிக்கு போனஸ் தருவீங்களா பாஸ்
- தீபாவளியும் வருது மழையும் வருது
- ரொம்ப நாள் கழிச்சு பார்த்தா நல்லாருக்கியான்னு கேளுங்கடா