வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

அண்ணா வேற டிசைன் காமிங்கண்ணா.. இதுக்கு மேல பக்கத்து வீட்டு மாடில காயிற துணிய தான்மா திருடிட்டு வரணும், ட்ரெண்டிங் மீம்ஸ்

Memes: இதோ அதோ என்று தீபாவளி பண்டிகையும் நெருங்கி வந்துவிட்டது. இன்னும் சில தினங்களில் பண்டிகையை அனைவரும் கொண்டாட இருக்கும் நிலையில் துணி கடைகளில் கூட்டம் அலைமோதிக்கொண்டு தான் இருக்கிறது.

diwali-memes
diwali-memes

அதிலும் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் வாடிக்கையாளர்களை கவனித்தே நொந்து போய்விட்டனர் பணியாளர்கள். அதில் பெண்களை உடை விஷயத்தில் சந்தோஷப்படுத்துவது ஆண்டவனாலும் கூட முடியாத காரியம்.

diwali-memes
diwali-memes

என்னதான் நல்ல டிசைன் துணிகளை காட்டினாலும் வேற இருக்கா என்பதுதான் அவர்களுடைய ஒரே டயலாக். இதுல டிசைன் சரியில்ல இதுல கலர் சரியில்ல இதே டிசைன்ல வேற கலர் காட்டுங்க என படுத்தி எடுத்து விடுவார்கள்.

diwali-memes
diwali-memes

கடைசியில் கடையையே புரட்டிப்போட்டு வேண்டாம் என்று சொல்லிச் செல்லும் பெண்களும் உண்டு இதில் குடும்ப தலைவர்கள் வேறு உட்காருவதற்கு எங்காவது இடம் கிடைக்குமா என பார்த்து செட்டில் ஆகி விடுவார்கள்.

diwali-memes
diwali-memes

பெண்கள் ஆற அமர புடவை எடுத்து வருவதற்குள் இருட்டிவிடும். இது பண்டிகை நாட்களில் நடப்பது தான். அதை நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கிண்டல் அடித்து வருகின்றனர்.

diwali-memes
diwali-memes

இதுக்கு மேல வேற டிசைன்ல துணியை காட்டணும்னா பக்கத்து வீட்டு மாடில இருந்து தான் திருட்டிட்டு வரணும் என நகைச்சுவை மீம்ஸ் வைரலாகி வருகிறது. அதன் தொகுப்பு இதோ.

diwali-memes
diwali-memes

Trending News