வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

தீபாவளிக்கு ஊரு பக்கம் வந்தேன்.. திரும்பி சென்னை போலாமா இல்ல பொங்கலையும் முடிச்சிட்டு போலாமா, வைரல் மீம்ஸ்

Memes: அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்த தீபாவளி ஒரு வழியாக முடிந்துவிட்டது. ஆனால் அந்த ஒரு நாளுக்காக கடன் வாங்கியாவது செலவு செய்தவர்களின் நிலைதான் இப்போது கஷ்ட காலமாக இருக்கிறது.

memes
memes

ஏற்கனவே கட்டிக்கிட்டு இருக்கிற இஎம்ஐ, வாடகை இவற்றோடு சேர்த்து தீபாவளி கடனையும் இனி அடைக்க வேண்டும். அதனால் லீவு முடிந்த கையோடு எல்லோரும் பொழப்ப பார்க்க கிளம்பிவிட்டனர்.

memes
memes

அதேபோல் தீபாவளிக்கு சொந்த ஊருக்கு சென்ற மக்கள் திரும்பி சென்னை வருவதற்கு அவ்வளவு யோசிக்கின்றனர். இதை மீம்ஸ் கிரியேட்டர்கள் தங்களுடைய ஸ்டைலில் கலாய்த்து வருகின்றனர்.

memes
memes

தீபாவளிக்கு சொந்த ஊருக்கு வந்துட்டோம் இப்ப சென்னை போலாமா இல்ல பொங்கலையும் முடிச்சுட்டு போலாமா என சிலர் வில்லங்கமாக யோசிக்கின்றனர். அதே சமயம் ஊருக்கு சென்ற அனைவரும் சென்னை நோக்கி படையெடுத்து வருவதால் அங்கங்கு டிராபிக் சிக்கலும் ஏற்பட்டுள்ளது.

memes
memes

இது ஒரு பக்கம் இருக்க ஐந்து நாட்கள் விடுமுறை முடிந்து ஸ்கூலுக்கு போவதற்கு அடம் பிடிக்கும் பிள்ளைகளும் உண்டு. வேண்டா வெறுப்பாக இருக்கும் குழந்தைகளை ஸ்கூலுக்கு அனுப்புவதற்குள் பெற்றோர்களின் பாடு தான் திண்டாட்டமாக இருக்கிறது.

memes
memes

இப்படியாக திங்கட்கிழமை அனைவரின் மனநிலையும் பல்வேறு விதமாக இருக்கிறது. அதை குறிப்பிடும் வகையில் பல மீம்ஸ் வைரலாகி வருகிறது. அப்படி நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் சில மீம்ஸ் தொகுப்பு இதோ.

memes
memes

Trending News