செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

இப்பதான் ஜனவரிய பாத்த மாதிரி இருந்துச்சு.. டேய் டிசம்பர் நீ எப்படா வந்த, வைரல் மீம்ஸ்

Memes: ஒருவழியாக வருடத்தின் கடைசிக்கு வந்து விட்டோம். இப்பொழுது தான் புது வருடத்தை பார்த்தது போல் இருந்தது திடீரென பார்த்தால் டிசம்பர் மாதத்தில் இருக்கிறோம்.

புதுவருடம் பிறப்பதற்கு இன்னும் சில வாரங்கள் இருக்கும் நிலையில் நெட்டிசன்கள் இப்போதே அதை வரவேற்க தயாராகிவிட்டனர். அதேபோல் போன வருஷம் எடுத்த உறுதி மொழியையே இன்னும் முடிக்காமல் இருப்பவர்களும் உண்டு.

இருந்தாலும் புது வருடத்தில் என்ன உறுதிமொழி எடுக்கலாம் என இப்போதே சிலர் சிந்தித்து வருகின்றனர். அதேபோல் ஜனவரி மாதம் வந்தால் போதும் டயட் இருப்பது ஜிம் செல்வது குடிப்பழக்கத்தை நிறுத்துவது என தீயாக வேலை செய்வார்கள்.

ஆனால் சில நாட்கள் கூட இதை பின்பற்ற முடியாது. பழைய குருடி கதவை திறடி என்ற கதையாக மீண்டும் சோம்பேறி ஆகி விடுவோம். இது வருஷா வருஷம் நடப்பது தான்.

memes
memes

அதை இணையவாசிகள் மீம்ஸ் போட்டு வைரல் செய்து வருகின்றனர். இப்பதான் ஜனவரி வந்துச்சு டேய் டிசம்பர் நீ என்னடா அதுக்குள்ள வந்துட்ட என பங்கம் செய்து வருகின்றனர்.

இந்த வருஷ பிரச்சனையே இன்னும் முடியல அதுக்குள்ள புது வருஷம் வேறயா. அது என்ன பண்ண காத்துக்கிட்டு இருக்கோ தெரியலையே போன்ற மீம்ஸ் வைரல் ஆகி வருகிறது. அதன் தொகுப்பு இதோ.

Trending News