Memes: வருடத்தின் இறுதியில் இருக்கிறோம். பொதுவாக நவம்பர் மாதம் வந்தாலே குளிர் ஆரம்பித்து விடும் அதிலும் இந்த வருடம் அக்டோபர் மாதத்திலேயே மழை தொடங்கிவிட்டது.
சென்னையில் இயல்பாகவே டிசம்பர் மாதம் தான் புயல் வெள்ளம் என ஊரே நடுங்கி போய் இருக்கும். ஆனால் நவம்பர் மாத இறுதியில் பெஞ்சல் புயல் அனைவரையும் ஒரு வழியாக்கி விட்டது.
அதேபோல் இந்த வருடம் கடும் குளிர் நிலவி வருகிறது. அதிலும் புறநகர் பகுதியில் எதிரே வரும் வண்டி தெரியாத அளவுக்கு பனிமூட்டம் இருக்கிறது.
இதை தற்போது சென்னை வாசிகள் அனுபவித்து என்ஜாய் செய்து வருகின்றனர். இன்னும் சிலர் காய்ச்சல் சளிக்கு பயந்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்கின்றனர்.
இதை நெட்டிசன்கள் மீம்ஸாக போட்டு வருகின்றனர். கொண்டை ஊசி வளைவு மட்டும் இருந்திருந்தா ஊட்டி கொடைக்கானல் எல்லாம் காலி டா என குளுகுளு சென்னை மீம்ஸ் இப்போது வைரலாகி வருகிறது.