Memes: ராஜமவுலி இயக்கத்தில் பாகுபலி படம் வந்தபோது உலக அளவில் பெரும் வரவேற்பு கிடைத்தது. அதை அடுத்து அதே போல் படம் எடுக்க வேண்டும் என அனைத்து திரையுலகமும் களத்தில் குதித்தது.
அதன்படி தமிழில் வெளிவந்த பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களும் வரவேற்பு பெற்றது. அதை அடுத்து கங்குவா படம் 1000, 2000 கோடிகளை தட்டி தூக்கும் என பில்டப் கொடுக்கப்பட்டது.
ஆனால் போட்ட காசை கூட எடுக்க முடியவில்லை. இது இப்படி இருக்க தெலுங்கு திரை உலகில் பல பிரம்மாண்ட படங்கள் அடுத்தடுத்து வந்து கொண்டிருக்கின்றது. அதேபோல் அவை வசூலிலும் மாஸ்காட்டி வருகிறது.
அதன்படி ஆர் ஆர் ஆர் சலார் கல்கி புஷ்பா என படங்கள் இண்டஸ்ட்ரியல் ஹிட் அடித்து வருகிறது. அதில் இன்று புஷ்பா 2 வெளியாகி இருக்கும் நிலையில் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது.
இதை பார்த்த தமிழ் ரசிகர்கள் அவங்க அடுத்தடுத்து போய்கிட்டே இருக்காங்க. நீங்க இன்னும் பாகுபலியில் படம் மாதிரி எடுக்க போறேன்னு சொல்லிட்டே இருங்க என மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர்.
அதேபோல் அரண்மனை காஞ்சனா ஆகிய படங்களின் அடுத்தடுத்த பாகங்கள் வெளிவந்ததையும் சுட்டி காட்டியுள்ளனர். இப்படி போச்சுன்னா எப்படி தமிழ் சினிமா முன்னேறும் என மீம்ஸ் வைரல் ஆகிறது.