Memes: நேற்று அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டு எல்லோருக்குமான தலைவர் என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. அந்த நிகழ்வில் விஜய் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசிய பேச்சு இப்போது வைரலாகி வருகிறது. அதிலும் அரசியல் பிரமுகர்கள் பலரும் இதற்கு எதிரான கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதிலும் மன்னர் ஆட்சி நடக்கிறது. 2026ல் மக்கள் பதிலடி கொடுப்பார்கள் போன்ற பேச்சு தான் இந்த பரபரப்புக்கு காரணம்.
இது குறித்து துணை முதல்வர் உதயநிதியிடம் கேள்வி கேட்கப்பட்டது. ஆனால் அவர் நான் சினிமா செய்திகளை பார்ப்பதில்லை என்று நழுவி விட்டார்.
இது போதாதா நெட்டிசன்கள் தற்போது அவரை மீம்ஸ் போட்டு கிண்டல் அடித்து வருகின்றனர். சினிமா செய்திகளை பார்க்க மாட்டார்.
ஆனா எல்லா படங்களையும் வாங்கி ரிலீஸ் செய்வார். அமரன் படத்தை அப்பாவுடன் சேர்ந்து பார்ப்பார் என மீம்ஸ் போட்டு வைரல் செய்து வருகின்றனர். அதன் தொகுப்பு இதோ.