Memes: மாசா மாசம் வாடகை இஎம்ஐ கட்டுவது போல் மொபைல் ரீசார்ஜ் செய்வதும் கட்டாயமாகிவிட்டது. அதிலும் நெட்வொர்க் கம்பெனி அவ்வப்போது அதன் விலையை கூட்டி விடுகின்றனர்.

இருக்கிறவன் மூணு மாசம் ஒரு வருஷம் என சேர்த்து ரீசார்ஜ் செய்து கொள்வான். ஆனால் இல்லாதவர்கள் மாசா மாசம் தான் ரீசார்ஜ் செய்ய முடியும்.

அதிலும் 30 நாட்கள் இருக்கிறதா என்று கேட்டால் 28 நாட்கள் தான் ரீசார்ஜ் பிளான். இதை நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கலாய்ப்பதுண்டு.

அதில் பலரின் மைண்ட் வாய்ஸ் இருக்கும். அதே போல் நம் சொந்த காசை போட்டு ரீசார்ஜ் செய்வோம்.

ஆனால் கம்பெனியில் இருந்து அவர்கள் ஏதோ இலவசமாக செஞ்ச மாதிரி கங்கிராட்ஸ்னு மெசேஜ் போடுவாங்க. இது ஒரு வகை என்றால் நேரம் காலம் தெரியாமல் ரீசார்ஜ் முடிந்து விடும்.

மாசக் கடைசியில் நீ வேற படாத பாடு படுத்துறியே என தோன்றும். இப்படி நாம் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைகள் நகைச்சுவை மீம்ஸ் ஆக வைரலாகி வருகிறது.
