Memes: வருஷா வருஷம் டிசம்பர் மாதம் வந்தால் சென்னை தான் பெரும் ஆபத்தில் சிக்கும். ஆனால் இந்த முறை பருவமழை மொத்த தமிழ்நாட்டையும் ஒரு காட்டு காட்டிவிட்டது.
அதிலும் வரப் போறேன் வரப் போறேன்னு நின்னு நிதானமா வந்தது பெஞ்சல் புயல். ஆனால் போற போக்கில் பல மாவட்டங்களை அது சூறையாடிவிட்டது.
அதில் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் உள்ளிட்ட பல மாவட்டங்கள் சேதாரம் அடைந்தது. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கையை தொலைத்து தவித்தனர்.
இது ஒரு புறம் இருக்க 16 கோடியில் கட்டப்பட்ட பாலம் அடித்து செல்லப்பட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திருவண்ணாமலை தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டு மூன்று மாதங்கள் தான் ஆனது.
அந்தப் பாலம் வெள்ள பாதிப்பால் உடைந்தது அரசியல் வட்டாரத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியது. இது பெரும் கண்டனத்திற்கும் ஆளானது.
அதே சமயம் இணையவாசிகள் இதை மீம்ஸ் போட்டு பங்கம் செய்து வருகின்றனர். இந்த மலைக்கு பாலத்துல தண்ணியே நிக்கல பாருங்க ப்ரோ.
டேய் அங்க பாலமே நிக்கலடா என பல மீம்ஸ் வைரலாகி வருகிறது. அதன் தொகுப்பு இதோ.