Memes: மனைவியை அடக்கி புலி போல் கணவர்கள் இருந்த காலம் மாறிவிட்டது. இப்போது இல்லத்தரசிகளின் ஆதிக்கம் தான் நிறைந்து இருக்கிறது.

அதிலும் டாடியின் லிட்டில் பிரின்சஸ் பாதி நேரம் வீட்டில் சமைப்பது கிடையாது. அப்படியே சமைத்தாலும் அதில் இருக்கும் குறைகளை சொல்லாமல் கணவர்கள் சாப்பிட்டு விட வேண்டும்.

இல்லையென்றால் அடுத்த வேளை கஞ்சிக்கு கஷ்டம் தான். அதேபோல் பிள்ளைகளுக்கு ஒரு மாதிரியும் கணவர்களுக்கு ஒரு மாதிரியும் கூட சாப்பாடு கிடைக்கும்.

காஞ்சூரிங் கண்ணப்பன் படத்தில் சரண்யா தோசையை கல்லிலிருந்து எடுக்க போராடுவார். அப்போது வரும் சதீஷ் என்னம்மா இப்படி இருக்கு என கேட்பார்.

உடனே அவர் விடுடா இது அப்பாவுக்கு தான் என அசால்ட்டாக சொல்லுவார். இது பல வீடுகளில் தினந்தோறும் நடக்கும் சம்பவம் தான்.

தோசை பிஞ்சு போனாலும் கருகி போனாலும் உடனே கணவர்களின் தட்டுக்கு சென்று விடும். பிள்ளைகளுக்கு முருகலான சூப்பர் தோசை கிடைக்கும்.

இதுதான் குடும்ப அரசியல் என நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு வருகின்றனர். அதேபோல் இதையெல்லாம் மனைவியிடம் சொன்னால் கிடைக்கிற காஞ்சி போன தோசையும் கிடைக்காமல் போய்விடும்.
இப்படி பல மீம்ஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதன் தொகுப்பு இதோ.