Memes: தற்போதைய சூழலில் மக்கள் சந்திக்கும் முக்கியமான பிரச்சனை விலைவாசி ஏற்றம் தான். அதிலும் ஒவ்வொரு பொருளுக்கும் ஜிஎஸ்டி என்பது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே அத்தியாவசிய பொருட்களில் தொடங்கி எல்லாத்துக்கும் ஜிஎஸ்டி இருக்கிறது. அதில் இப்போது தியேட்டர் மால்களில் விற்கப்படும் பாப்கார்னுக்கும் ஜிஎஸ்டி பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்த 55வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.
அதன்படி உப்பு போடப்பட்ட லூஸ் பாப்கார்ன் 5% பேக் பண்ணிய பாப்கார்ன் 12% கேரமல் போட்ட பாப்கார்ன் 18% என ஜிஎஸ்டி பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதற்கு கடும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் நெட்டிசன்கள் அதை ட்ரோல் செய்து வருகின்றனர். தியேட்டருக்கு போறதே பாப்கார்ன் வாங்கி சாப்பிட தான்.
படம் நல்லா இருக்கோ இல்லையோ இதுக்காகவே குழந்தைகளை அழைத்துக் கொண்டு செல்வார்கள். அதுக்கும் ஆப்பு வச்சா எப்படி திமிங்கலம்.
போற போக்க பார்த்தா தட்டுல இருந்து சாப்பாட கையில எடுத்து சாப்பிட்டா கூட ஜிஎஸ்டி போடுவாங்க போல என மனக்குமுறல்களை கொட்டி வருகின்றனர். அது பற்றிய சில மீம்ஸ் தொகுப்பு இதோ.