Memes: நேற்று கிறிஸ்துமஸ் உலகம் எங்கும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் கிறிஸ்டியன் நண்பர்களை கொண்டவர்கள் முந்தைய நாளிலிருந்து வாழ்த்துக்களை சொல்ல தொடங்கி விட்டனர்.
அப்பொழுதுதான் கேக் பிரியாணி எல்லாம் கிடைக்கும் என்ற பிளான் தான். இன்னும் சிலர் அக்கம் பக்கம் வீடுகளில் இதற்கு முன்பு பேசிக் கூட இருக்க மாட்டார்கள்.
ஆனால் கிறிஸ்துமஸ் வாழ்த்து சொல்லி நாசுக்காக கேக் வேண்டும் என உணர்த்தி விடுவார்கள். இப்படி கிறிஸ்மஸ் நாளில் ஏகப்பட்ட அலப்பறைகள் நடக்கும்.
இதில் சோசியல் மீடியாவிலும் மீம்ஸ் கலாட்டாக்கள் வைரல் ஆகி வந்தது. அதிலும் சாண்டா தாத்தாவை வைத்து வெளியான மீம்ஸ் தான் அதிகம்.
சாண்டா தாத்தா எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல. அதுக்கு ஒரு பொண்ணு கிப்ட்டா வேணும். எனக்கு கடன் இருக்கு ஒரு கோடி பணம் வேணும்.
இப்படி ஏகப்பட்ட மீம்ஸ் வைரலானது. இதை தாண்டி வழக்கம்போல அஜித், விஜய் ஃபேன் கூட கிறிஸ்மஸ் மீம்சை தங்களுக்கு சாதகமாக வைரல் செய்து வருகின்றனர்.
அதாவது கர்த்தர் உங்களுக்கு வலிமையும் துணிவையும் தருவார் என்றால் நான் தளபதி ஃபேன் என லந்து செய்யும் மீம்ஸ் சரவெடியாக இருக்கிறது. இப்படி சோசியல் மீடியாவை கலக்கும் சில மீம்ஸ் தொகுப்பு இதோ.