Memes: ஒருவழியாக பொங்கல் பண்டிகை முடிந்து விட்டது. இனி எல்லோரும் அவரவர் வேலையை பார்க்க வேண்டியது தான். வெளியூருக்கு சென்ற பலரும் இப்போது ஊருக்கு வர தொடங்கிவிட்டனர்.
இதனால் சென்னை உள்ளிட்ட மாநகரங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வருகிறது. இருந்தாலும் அடித்து பிடித்து ஊருக்கு வர வேண்டும் என பலரும் கிளம்பிவிட்டனர்.
அதேபோல் லீவு வந்ததும் தெரியல போனதும் தெரியல என்ற ரீதியில் மாணவர்கள் இருக்கின்றனர். இது ஒரு பக்கம் இருக்க பொங்கல் அலப்பறை சில வீடுகளில் இன்னும் முடிந்த பாடு இல்லை.
பொங்கலே முடிச்சு போச்சு ஆனா வீட்ல வெச்சா பொங்கல் மட்டும் இன்னும் முடியலையே. மூணு வேளையும் பொங்கல் தான் சாப்பிடறேன் இன்னும் தீரவே மாட்டேங்குது.
அப்படி எவ்வளவு பொங்கல் தான் வச்சான்னு தெரியலையே மகராசி என குடும்ப தலைவர்கள் மனைவியை சத்தம் இல்லாமல் திட்டி வருகின்றனர்.
இன்னும் சிலர் எதுவும் சொல்ல முடியாத சூழலில் பொங்கலை வேண்டா வெறுப்பாக சாப்பிடுகின்றனர். இதுதான் இப்போது சோஷியல் மீடியாவில் ட்ரெண்டிங் மீம்சாக கலக்கி வருகிறது.
பல வீடுகளில் இதுதான் நிலைமை. பானை நிறைய பொங்கல் வைக்க வேண்டும் என்பது ஐதீகம். ஆனால் சிறு குடும்பத்திற்கு இது ரொம்பவே அதிகம்.
அதனால் இன்றைய மருமகள்கள் பிரிட்ஜில் வைத்து அதையே சூடு செய்து கொடுத்து கணவர்களை டார்ச்சர் செய்த சம்பவங்களும் உண்டு. அப்படி பொங்கல் அலப்பறை நகைச்சுவை மீம்ஸ் இதோ உங்களுக்காக.