Memes: காலம் மாறிவிட்டது ஆண்களுக்கு சமமாக பெண்களும் எல்லா வேலைகளையும் செய்து வருகின்றனர். அப்படித்தான் ஸ்கூட்டியில் ஆரம்பித்து புல்லட் வரை பெண்கள் ஓட்டுகின்றனர்.

இது ஒரு வகை என்றால் சில பெண்கள் ஸ்கூட்டி ஓட்டவே தடுமாறுவார்கள். ஆனாலும் ரோட்டில் அவர்கள் செய்யும் அலப்பறை கொஞ்சநஞ்சம் கிடையாது.

இதனால் தினந்தோறும் பாதிக்கப்படுவது ஆண்கள்தான். இதை அன்றாட வாழ்வில் நாம் கவனித்திருக்கலாம். அதாவது ஸ்கூட்டியில் செல்லும் பெண்கள் லெப்டில் இன்டிகேட்டர் போட்டு ரைட்டில் திரும்பும் சம்பவங்களும் நடப்பதுண்டு.

அதேபோல் வண்டியை நிறுத்த வேண்டும் என்றால் காலில் தேய்த்துக்கொண்டே நிறுத்துவார்கள். இது அவ்வப்போது ட்ரோல் வீடியோக்களாக கலாய்க்கப்படுவதுண்டு.

ஆண்கள் பைக்கில் செல்லும் போது முன்னால் ஒரு ஸ்கூட்டி சென்றால் பதட்டமாக தான் இருக்கும். இருக்கிற பிரச்சினை பத்தாதுன்னு இந்த பொண்ணுங்க வேற என புலம்புபவர்களும் உண்டு.

பெண்கள் சொந்த காலில் நிக்கணும்னு சொன்னத ஸ்கூட்டி ஓட்டுறவங்க தப்பா புரிஞ்சிக்கிட்டாங்க, எவ்வளவு தைரியசாலியா இருந்தாலும் ஸ்கூட்டி ஓட்டுற பெண்ணை பார்த்தா பயமாதா இருக்கு என பல மீம்ஸ் வைரலாகி வருகிறது.
