Memes: தற்போதைய சோசியல் மீடியாவின் பரபரப்பு செய்தி மும்மொழி கொள்கை தான். இதற்கு தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பல சர்ச்சைகள் எழுந்துள்ளது.

அதில் தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய கல்வி திட்டங்களுக்கான நிதி மறுக்கப்பட்டிருக்கிறது. மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொண்டால் தான் அந்த நிதி விடுவிக்கப்படும் என மத்திய அமைச்சர் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

இது அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் அரசியல் பிரபலங்கள் தங்கள் கருத்துக்களை ஆணித்தரமாக முன்வைத்து வருகின்றனர்.

அதேபோல் நெட்டிசன்கள் ஹிந்தி முக்கியம் என்றால் வடமாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு வருபவர்களும் தமிழ் கற்றுக்கொண்டு வரட்டும்.

அங்கும் தமிழ் மொழியை கட்டாய பாடமாக்குங்கள் என தங்கள் கோபத்தை காட்டி வருகின்றனர். அதேபோல் ஹிந்தி திணிப்புக்கு எதிராக அரசியல் பிரபலங்கள் பேசி வருகின்றனர்.

ஆனால் அவர்கள் வீட்டுப் பிள்ளைகளே மும்மொழி கல்வி முறையில் படிக்கின்றனர். எல்லாமே அரசியல் ஆதாயம் தான் என நெட்டிசன்கள் கொந்தளித்து வருகின்றனர்.

இது குறித்த மீம்ஸ் தற்போது சோசியல் மீடியாவில் பரவி வருகிறது. அப்படி இணையத்தை சுற்றி வரும் சில மீம்ஸ் தொகுப்பு இதோ.
