புதன்கிழமை, ஜனவரி 8, 2025

நடிகர் சங்க பிரச்சனையை தீர்க்க கலை நிகழ்ச்சி.. அப்படி எவ்வளவு கடன் தான் வச்சிருக்கீங்க, வைரல் மீம்ஸ்

Memes: ஒரு காலத்தில் விஜயகாந்த் நடிகர் சங்கத்துக்காக எவ்வளவோ ரிஸ்க் எடுத்து நல்ல விஷயங்களை செய்தார். ஆனால் இப்போது அந்த நடிகர் சங்கம் ஏகப்பட்ட கடனில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறது.

memes-latest
memes-latest

கடனை அடைத்து விடுவோம் என்று மீட்டிங் போட்டு சொல்கிறார்களே தவிர அது என்ன கடன் எவ்வளவு கடன் என்று யாருக்கும் தெரியாது. கிட்டதட்ட விக்ரமாதித்தன் வேதாளம் கதையாக இருக்கிறது இந்த விவகாரம்.

memes-latest
memes-latest

நடிகர் சங்கம் கட்டிடம் கட்டினால் தான் கல்யாணம் என விஷால் ஒரு உறுதிமொழி எடுத்தார். அதை அடுத்து கட்டிடத்திற்கு அஸ்திவாரம் போடப்பட்டு வேலைகளும் தொடங்கியது. ஆனால் அது எந்த நிலையில் இருக்கிறது என தெரியவில்லை.

memes-latest
memes-latest

அதேபோல் சமீபத்தில் நடந்த செயற்குழு கூட்டத்தில் கூட இந்த கடன் பற்றி விவாதித்து இருக்கிறார்கள். மேலும் செய்தியாளர்களிடம் கூட கார்த்தி கடனை அடைக்க கலை நிகழ்ச்சிகள் நடத்தப் போகிறோம் என ஷாக் கொடுத்தார்.

memes-latest
memes-latest

அது மட்டும் இன்றி ரஜினி, கமல் இணைந்து ஒரு படம் பண்ணப் போகிறார்கள் என்றும் கூறினார். இதன் மூலம் வரும் பணத்தை வைத்து கடனை அடைத்து விடுவோம் என்ற நம்பிக்கையில் இருக்கிறது நடிகர் சங்கம்.

memes-latest
memes-latest

இது எந்த அளவுக்கு சாத்தியம் என்பது அவர்களுக்கே வெளிச்சம். இதை நெட்டிசன்களும் மீம்ஸ் போட்டு கிண்டல் அடித்து வருகின்றனர். என்ன பெரிய பெத்த கடன் நடிகர் சங்க கடன் தெரியுமா என சில மீம்ஸ் இணையத்தை சுற்றி வருகிறது.

சோசியல் மீடியாவை கலக்கும் நகைச்சுவை மீம்ஸ்

Trending News