Memes: நியூ இயர் முடிந்த நிலையில் அனைவரும் பொங்கல் திருநாளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதிலும் இந்த முறை பொங்கலுக்கு மொத்தமாக ஆறு நாட்கள் லீவ் கிடைத்திருக்கிறது.
அதிலும் சிலர் 13ம் தேதி திங்கட்கிழமை ஒருநாள் லீவு போட்டு விட்டால் மொத்தம் ஒன்பது நாட்கள் லீவு கிடைக்கும் என இப்போதே பிளான் செய்து விட்டனர்.
அது மட்டும் இன்றி பள்ளி மாணவர்கள் கூட இந்த மாதம் ரொம்ப நல்ல மாதம் என குஷி ஆகிவிட்டனர். இப்படியாக பொங்கல் பண்டிகை கலைகட்ட தொடங்கிவிட்டது.
இதில் இல்லத்தரசிகள் வீட்டை சுத்தம் செய்வது பொங்கலுக்கு தேவையானவற்றை வாங்குவது என பிசியாக இருக்கின்றனர். இதனால் குடும்ப தலைவர்களின் பாடு தான் திண்டாட்டமாக இருக்கிறது.
தீபாவளிக்கு வாங்குன கடனையே இன்னும் அடைக்கல அதுக்குள்ள பொங்கலா என மலைத்துப் போகின்றனர். இன்னும் சிலர் முன்னாடி எல்லாம் பொங்கலுக்கு 1000 ரூபா பணம் கொடுப்பாங்க.
வீட்ல இருந்து அதை வாங்கி விஜய் அஜித் படத்துக்கு போவோம். ஆனா இந்த வருஷம் பணமும் வரல படமும் வரல என புலம்பி வருகின்றனர்.
இப்படி பல மீம்ஸ் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. அதன் தொகுப்பு இதோ.