பெட்ரோல் விலை குறையுமா ஜீ.. அவ்ளோ திமிரா உனக்கு, இந்தா கேஸ் விலை உயர்வு, ராமநவமி ஸ்பெஷல் மீம்ஸ்

Memes: நேற்றுதான் ஜீ ராமநவமி வழிபாடு செய்தார். இன்று பார்த்தால் ஸ்பெஷல் பரிசு கொடுத்து எல்லாரையும் வாயடைக்க வைத்து விட்டார்.

பெட்ரோல் டீசல் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து சில நிமிடங்களிலேயே கேஸ் சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டிருக்கிறது.

இது தற்போது கடும் அதிர்வை ஏற்படுத்தி இருக்கிறது. நம்மவர்கள் ஏற்கனவே மத்திய அரசு மேல் அதிருப்தியில் இருக்கின்றனர். அதில் தற்போது மக்களை முட்டாளாக்குவதிலேயே குறியாக இருக்கிறது மத்திய அரசு.

கச்சா எண்ணெய் விலை கடும் வீழ்ச்சி அடைந்தாலும் பெட்ரோல் டீசல் விலை குறையவில்லை. 2014ம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்தபோது சமையல் எரிவாயு விலை 416 ஆக தான் இருந்தது.

இப்போது பார்த்தால் அது 850 தாண்டி விடுகிறது. இதுக்கு இல்லையா ஒரு எண்டு எப்ப தான் இந்த வரி சுமையிலிருந்து விடுபடுவோம் என்பதுதான் அனைவரின் ஏக்கம்.

அதேபோல் வடபகுதியில் பாஜகவுக்கு ஓட்டு போட்டு விடுகின்றனர். நாம் மொத்தமாக விளைவுகளை சந்திக்க வேண்டியதாக இருக்கிறது.

பெட்ரோல் விலை குறையுமான்னு கேட்டதுக்கு இப்படி ஒரு தண்டனையா. ராம நவமி பரிச சிறப்பா கொடுத்துட்டாரு ஜீ என இணையவாசிகள் ஒரு பக்கம் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பான சில மீம்ஸ் தொகுப்பு இதோ.

Leave a Comment

பொழுதுபோக்கு

புகைப்படங்கள்