வியாழக்கிழமை, பிப்ரவரி 6, 2025

64 ஆயிரத்தை நெருங்கிய தங்கம் விலை.. அவங்ககிட்ட சொல்லி யாராவது நிறுத்துங்களேன்டா, ட்ரெண்டிங் மீம்ஸ்

Memes: கடந்த சில மாதங்களாகவே தங்கத்தின் விலை ஏற்றமாக இருக்கிறது. அதிலும் இந்த வருடம் தொடங்கி ஒரு மாதம் தான் முடிந்திருக்கிறது.

ஆனால் அதற்குள்ளாகவே தங்கம் இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இந்த வருட பட்ஜெட்டிற்கு பிறகு தங்கம் விலை குறையும் என நடுத்தர வர்க்கத்தினர் எதிர்பார்த்தனர்.

ஆனால் அதற்கு மாறாக ஒரே வாரத்தில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரப்படி ஒரு கிராம் 7,930 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

அதன்படி ஒரு சவரன் 63,440 ரூபாயாக உள்ளது. கிட்டத்தட்ட 64 ஆயிரத்தை நெருங்கி இருக்கிறது. ஆனால் கடையில் ஒரு நகை வாங்க வேண்டும் என்றால் இந்த காசு பத்தாது.

செய்கூலி சேதாரம் வரி என நகைக்கடைக்காரர்கள் 70 ஆயிரத்தை தாண்டி பில் போட்டு விடுகின்றனர்.

இப்படியே சென்றால் மிடில் கிளாஸ் மக்களுக்கு தங்கம் எட்டாக்கனியாக மாறிவிடும். உயர் வர்க்கத்தினர் மட்டுமே அணியும் ஆபரணம் என்ற நிலைக்கு தங்கம் சென்று விடும்.

அது மட்டும் இன்றி இந்த வருட இறுதிக்குள் தங்கம் விலை ஒரு லட்சத்தை தொடும் என அதிர்ச்சி கணிப்புகளும் வந்துள்ளது. இதனால் நகை பிரியர்கள் கடும் மன உளைச்சலில் இருக்கின்றனர்.

ஆனால் அதை கூட மீம்ஸ் கிரியேட்டர்கள் நகைச்சுவை கமெண்ட் ஆக பதிவிட்டு வருகின்றனர். அப்படி தங்கம் விலை பற்றிய சில மீம்ஸ் தொகுப்பு இதோ.

Trending News