Memes: உலகம் கையளவில் வந்துவிட்டது. எல்லாமே ஸ்மார்ட் போன் வசம் தான். சோறு தண்ணி இல்லாமல் கூட இருந்து விடுவார்கள். அரைமணி நேரம் செல்போன் இல்லாமல் யாராலும் இருக்க முடிவதில்லை.
அந்த அளவுக்கு டெக்னாலஜி நிழல் போல் நம்மை தொடர்ந்து வருகிறது. அதிலும் சாதாரண விஷயங்களுக்கு கூட கூகுளை சர்ச் செய்பவர்கள் தான் இங்கு அதிகம்.
பெரியவர்கள் தான் இப்படி என்றால் குழந்தைகள் கூட அவர்களைப் பார்த்து கற்றுக் கொள்கின்றனர். ஹோம் வொர்க் செய்யும்போது ஏதாவது தெரியலனாலும் google உதவியை தேடும் மாணவர்கள் தான் இங்கு அதிகம்.
இதில் சிலர் தேவையில்லாத விஷயங்களையும் தேடுவதுண்டு. உதாரணத்திற்கு தக்காளி இல்லாமல் சாம்பார் வைப்பது எப்படி என தொடங்கி மனசு சரியில்ல கூகுள் என்பது வரை அலப்பறை செய்கின்றனர்.
அதற்கு மட்டும் வாய் இருந்தால் காதில் கேட்க முடியாத அளவுக்கு வார்த்தைகளை துப்பி விடும். அந்த அளவுக்கு நம் மக்கள் அலப்பறை செய்து வருகின்றனர். இப்படி இணையத்தை கலக்கும் சில ஜாலி மீம்ஸ் இதோ உங்களுக்காக.