Memes: இப்போது ஹிந்தி தான் சோசியல் மீடியாவில் பெரும் சர்ச்சைக்குரிய டாப்பிக்காக உள்ளது. ஹிந்திக்கு நாங்கள் எதிரி கிடையாது ஆனால் திணிக்க வேண்டாம் என தமிழகத்தில் கூறுகின்றனர்.

ஆனால் ஹிந்தி தெரியலைன்னா பிச்சை எடுக்க முடியாது. பாத்ரூம் கூட போக முடியாது என மத்திய அரசு விசுவாசிகள் சம்பந்தமில்லாமல் பேசி வருகின்றனர்.

இது ஒரு புறம் இருக்க ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் ஹிந்தியை எதிர்க்கும் நீங்கள் ஏன் தமிழ் படத்தை ஹிந்தியில் டப் செய்ய வேண்டும் என கேட்கிறார்.

உண்மையில் கல்விக்கும் பொழுது போக்குக்கும் என்ன சம்பந்தம். நாங்கள் டப் செய்யும் படத்தை பார்த்தே ஆக வேண்டும் என யாரும் கட்டாயப்படுத்தவில்லை.

அது கூட இவருக்கு தெரியலயே என நெட்டிசன்கள் ஒரு பக்கம் அவரை கிண்டல் அடித்து வருகின்றனர். அதேபோல் நீங்கள் ஹிந்தியில் மட்டும் படம் நடிக்க வேண்டியது தானே என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும் பிஜேபி தமிழிசை முதல்வர் பெயரை மாற்றங்கள் என கூறுகிறார் அவருக்கு பதிலளிக்கும் விதமாக நீங்கள் வேண்டுமென்றால் உங்கள் பெயரை ஹிந்துஸ்தானி என மாற்றிக்கொள்ளுங்கள் என இணையவாசிகள் அலப்பறை செய்து வருகின்றனர்.

ஆனால் ஹிந்தி கத்து கொடுக்கிறது ஒரு பக்கம் இருக்கட்டும். முதல்ல ஹிந்திகாரங்களுக்கு ரிசர்வேஷன் சீட்டுனா என்னன்னு சொல்லி கொடுங்க.
நாங்க புக் பண்ற சீட்ல இவங்க ஏறி படுத்துகிட்டு டார்ச்சர் பண்றாங்க என பாதிக்கப்பட்ட நபர்கள் புலம்பி வருகின்றனர். இப்படி சோசியல் மீடியாவில் வைரலாகும் சில மீம்ஸ் தொகுப்பு இதோ.