Memes: ஹோலி பண்டிகை நாளை நாடும் முழுவதும் கொண்டாடப்படுகிறது. முன்பெல்லாம் இது போன்ற பண்டிகைகள் அந்தந்த மாநிலங்களில் மட்டுமே அமர்க்களமாக கொண்டாடப்படும்.

ஆனால் இப்போது இந்தியா முழுவதும் எல்லா பண்டிகைகளும் எல்லோராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதிலும் வட மாநிலத்தவர்கள் இந்தியா முழுவதிலும் இருக்கின்றனர்.

அதனாலேயே பல மாநிலங்களில் நாளைய தினம் விடுமுறையாக இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க ஹோலி அலப்பறைகள் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.

எங்கடா எல்லாரும் கூட்டமா கிளம்பிட்டீங்க. ஊருக்கு போறோம் சாப், வரும்போது பெரியப்பா சித்தப்பான்னு குடும்பத்தோட வருவோம் என வட இந்தியர்கள் சொல்வது போன்ற மீம்ஸ் வைரலாகி வருகிறது.

அதேபோல் நாங்க ஊருக்கு போயிட்டு வர்றதுக்குள்ள உங்க ஆளுங்களுக்கு வேலை போட்டு கொடுத்துறாதீங்க என இன்றைய சூழலையும் நக்கல் அடித்து மீம்ஸ் போட்டு வருகின்றனர்.

மேலும் முரட்டு சிங்கிளாக இருப்பவர்கள் ஹோலி கொண்டாட எனக்கு ஒரு டோலி இல்லையே என சோக ஸ்டேட்டஸ் போட்டு வருகின்றனர்.

இப்படி ஹோலி பண்டிகையை முன்னிட்டு பல மீம்ஸ் வைரலாகி வருகிறது. அப்படி நம்மை ரசிக்க சிரிக்க வைக்கும் சில மீம்ஸ் தொகுப்பு இதோ.