
Memes: கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த ipl திருவிழா ஆரம்பித்துவிட்டது. முதல் நாள் கொல்கத்தா மற்றும் பெங்களூர் அணி மோதியது.

அதில் ஆர்சிபி அசுரத்தனமாக விளையாடி வெற்றி பெற்றது. அதை பெங்களூர் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். அதை அடுத்து நேற்று சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் மேட்ச் நடைபெற்றது.

பலரும் எதிர்பார்த்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதியது. அதில் சிஎஸ்கே வெற்றி பெற்றது.

இதை சென்னை ரசிகர்கள் வெறித்தனமாக கொண்டாடுகின்றனர். அதேசமயம் சோசியல் மீடியாவில் எங்க கெத்த பாரு என மும்பை அணியை சீண்டும் விதமாக மீம்ஸ் போட்டு வருகின்றனர்.

அதற்கு பதில் கொடுக்கும் விதமாக ஈஸியா முடிக்க வேண்டிய மேட்ச கடைசி ஓவர் வரை இழுத்துட்டு போயிட்டு பெருமை வேறயா என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

அதேபோல் மொத மேட்ச் சாமிக்கு விட்டாதான்யா அது மும்பை இந்தியன்ஸ் என சமாளித்து வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க முதல் மேட்ச் ஜெயிச்சிட்டோம் கப்பு எங்களுக்கு தான்.

முதல் மேட்ச் தோத்தா தான் கப்பு உங்களுக்கு என பெங்களூரு அணியை கலாய்த்தும் மீம்ஸ் வைரலாகி வருகிறது. இப்படி சோசியல் மீடியாவை கலக்கும் ஐபிஎல் மீம்ஸ் தொகுப்பு இதோ.
