வாடிவாசல்ல இருந்து வர காளை மாதிரி எவ்ளோ ஸ்பீடா போறான்.. அதுக்குள்ள ஜனவரி முடிஞ்சிருச்சா, வைரல் மீம்ஸ்

memes
memes

Memes: இப்பதான் ஹாப்பி நியூ இயர் என கொண்டாடுன மாதிரி இருக்கு. ஆனா அதுக்குள்ள 2025 ல ஒரு மாசம் முடிய போகுது.

இந்த வருஷம் உறுதிமொழி எடுத்து அதை ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே பொங்கல் விடுமுறை அது இது என நாள் ஓடிவிட்டது. இப்ப பார்த்தால் பிப்ரவரி தொடங்க போகிறது.

என்னடா இது வாடி வாசலில் இருந்து வர காளை மாதிரி இவ்வளவு ஸ்பீடா போகுது என நமக்கே ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

இப்படி ஒரு பக்கம் கவலையாக இருந்தாலும் இஎம்ஐ லோன் எல்லாம் முடியப்போகுதுன்னு ஒரு பக்கம் சந்தோஷப்பட்டுக்க வேண்டியது தான். இதைத்தான் நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு அலப்பறை செய்து வருகின்றனர்.

ஜனவரி மாசம் எவ்வளவு ஸ்பீடா போனதுக்கு காரணம் பொங்கல் லீவு தான். அதிலும் இந்த வருடம் கிட்டத்தட்ட 9 நாட்கள் விடுமுறை கிடைத்தது.

அதிலும் சிலர் எக்ஸ்ட்ரா லீவு போட்டு விழாவை சிறப்பித்த சம்பவங்களும் உண்டு. அதனாலேயே ஜனவரி மாதம் வந்ததும் தெரியல போனதும் தெரியல.

இன்னும் சிலர் வருஷம் ஆரம்பிச்சு ஒரு மாசம்தான் ஆகுது. அதுக்குள்ள போரடிக்குது. அடுத்த வருஷம் எப்படா வரும் என அலப்பறை கொடுக்கின்றனர். அப்படி இணையத்தை கலக்கும் சில மீம்ஸ் தொகுப்பு இதோ.

Advertisement Amazon Prime Banner