Memes: 12 வருஷத்துக்கு முன்னாடி எடுத்த படம் இப்ப ரிலீஸ் ஆகி ஹிட் ஆவதெல்லாம் பெரும் சாதனைதான். அப்படித்தான் மதகஜராஜா படத்திற்கு தற்போது பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.
திரும்பவும் பக்கமெல்லாம் இப்படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. இதிலிருந்து ஒன்று மட்டும் தெரிகிறது தமிழ் சினிமாவில் நகைச்சுவை வறட்சி அதிகமாக இருக்கிறது.
இப்போது வரும் படங்கள் எல்லாம் ஆதிக்க அரசியல், வன்முறை, கொலை, ரத்தம் என பார்க்க சகிக்கவில்லை. ரிலாக்ஸா படம் பார்க்க வந்த மன உளைச்சலை தான் இது போன்ற படங்கள் ஏற்படுத்துகிறது.
மக்கள் விரும்புவது ஒன்றே ஒன்றுதான். எண்டர்டெயின்மென்ட், அதை சரியாக கொடுத்தால் எத்தனை வருஷம் கழிச்சு வந்தாலும் அந்த படம் ஹிட் ஆகும்.
அதை சுந்தர் சி மீண்டும் ஒருமுறை நிரூபித்து விட்டார். ஆனால் பல வருடங்களாக பார்த்து பார்த்து எடுத்த கேம் சேஞ்சர் ரசிகர்கள் மத்தியில் எடுபடவில்லை.
அதைத்தான் நெட்டிசன்கள் இப்போது கிண்டல் அடித்து வருகின்றனர். அதிலும் சங்கர் அப்டேட் ஆகவில்லை என்ற விமர்சனங்கள் தான் அதிகமாக வருகிறது.
12 வருஷத்துக்கு முன்னாடி வந்த படம் ஹிட் ஆகுது. அதை மட்டும் ஏத்துக்குறாங்க. இதுல நான் அப்டேட் ஆகணும்னு வேற சொல்றாங்க.
உங்கள எல்லாம் புரிஞ்சுக்கவே முடியலடா என பல மீம்ஸ் வைரல் ஆகி வருகிறது. இப்படி சோசியல் மீடியாவில் நம்மை சிரிக்கவும் ரசிக்கவும் வைக்கும் சில நகைச்சுவை மீம்ஸ் இதோ.