எப்பா டேய் எனக்கு புது வைரஸ நெனச்சு கூட பயமில்ல.. அதுக்கு நீங்க கண்டுபிடிக்க போற தடுப்பூசி நினைச்சா தான் நெஞ்சு வலிக்குது, மீம்ஸ்

memes
memes

Memes: புது வருடம் ஆரம்பித்து ஒரு வாரம் தான் முடிந்திருக்கிறது. அதற்குள் புது வைரஸ், லாக் டவுன், நிலநடுக்கம் என ஏகப்பட்ட அலப்பறைகள் சோசியல் மீடியாவில் கிளம்பிவிட்டது.

உண்மை என்ன என்று தெரியாமலேயே சில சோசியல் மீடியா சேனல்கள் புதுப்புது புரளிகளை கிளப்ப தொடங்கிவிட்டனர். சீனா வைரஸ் இந்தியாவில் வந்துவிட்டது.

பெங்களூரில் ஒருவர் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்று ஏகப்பட்ட செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் இது குறித்து எந்த பயமும் வேண்டாம் என சுகாதாரத்துறை கூறி வருகிறது.

இருந்தாலும் மக்கள் பீதியில் தான் இருக்கின்றனர். அதிலும் பள்ளி மாணவர்கள் அப்போ லாக்டவுன் போட போறாங்களா இனிமே ஸ்கூல் போக வேண்டாமா என தொண தொணக்க ஆரம்பித்து விட்டனர்.

இன்னும் சிலர் கொரோனா வந்தபோது எனக்கு எந்த கடனும் கிடையாது. ஆனால் இப்போ மாசம் ஏகப்பட்ட இஎம்ஐ கட்றேன்.

அதுக்குள்ள புது வைரஸ் வந்து என்ன பிச்சைக்காரனா ஆக்கிடும் போலயே என புலம்பி வருகின்றனர். இன்னும் சிலர் புது வைரஸ் நினைச்சு கூட பயமா இல்ல.

ஆனா அதுக்கு இவங்க கண்டுபிடிக்க போற தடுப்பூசிய நினைச்சா தான் இப்பவே நெஞ்சு வலிக்குது என பதறுகின்றனர். இப்படி ஏகப்பட்ட மீம்ஸ் சோசியல் மீடியாவில் பரவி வருகிறது.

அதேபோல் 2025 ஆரம்பமே இப்படியா இருக்கணும் என கலாய்த்து வைரலாகும் சில மீம்ஸ் தொகுப்பு இதோ.

Advertisement Amazon Prime Banner