Memes: புது வருடம் பிறந்து விட்டது. இந்த வருடமாவது நமக்கு நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையோடு புத்தாண்டை கொண்டாடி விட்டோம்.
இப்போது புது வருடத்தில் எந்த ராசிக்காரர்களுக்கு யோகம் என்ற பட்டிமன்றம் நடந்து வருகிறது. பிரபல சேனல்களில் இதுதான் விவாத நிகழ்ச்சியாகவும் ஓடிக் கொண்டிருக்கிறது.
இது ஒரு பக்கம் இருக்க புது வருஷம் இன்னும் என்னென்ன பஞ்சாயத்தை கொண்டு வரப் போகுதோ என சிலர் பீதியுடன் இருக்கின்றனர்.
இன்னும் சிலர் போன வருஷ பிரச்சனையே இன்னும் முடியலையே என நொந்து போய் இருக்கின்றனர். ஆனாலும் புதுவருட கொண்டாட்டங்களுக்கு குறைவில்லை.
ஆனால் வருஷம் தான் புதுசு வாழ்க்கை அதே பழசு தான். போங்க போய் வேலையை பாருங்க என லெஜன்ட் மக்கள் புத்தாண்டை சாதாரணமாக கடந்து போகின்றனர்.
அதேபோல் புது வருட மீம்ஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் வருஷம் ஆரம்பிக்கும்போது நல்லாதான் வெல்கம் பண்றீங்க.
ஆனா முடியும்போது கழுவி ஊத்துறீங்களே ஏண்டா இப்படி என பல மீம்ஸ் வைரல் ஆகி வருகிறது. இப்படி சோசியல் மீடியாவை கலக்கும் சில புத்தாண்டு மீம்ஸ் இதோ உங்களுக்காக.