சுனிதா வில்லியம்ஸ் பத்தியே பேசுறாங்களே.. எவனாச்சும் கூட வந்த ஆள பத்தி பேசுறானா, ட்ரெண்டிங் மீம்ஸ்

memes
memes

Memes: கிட்டத்தட்ட ஒன்பது மாதங்களாக பூமிக்கு திரும்ப முடியாமல் தவித்து வந்த சுனிதா வில்லியம்ஸ் இன்று பூமியில் கால் பதித்துள்ளார்.

அதை உலக நாடுகள் கொண்டாடி வருகிறது. இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்பதால் இந்திய மக்களும் அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர்.

அதிக நாட்கள் விண்வெளியில் இருந்த இரண்டாவது பெண் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்திருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க சோசியல் மீடியாவில் வழக்கம் போல நெட்டிசன்கள் அலப்பறை செய்து வருகின்றனர்.

சுனிதா வில்லியம்ஸ் பத்தியே எல்லா மீடியாவும் பேசிக்கிட்டு இருக்காங்க. கூட வந்த ஆள பத்தி ஒருத்தனாவது வாய் திறக்கிறானா பாரு என மீம்ஸ் வைரலாகி வருகிறது.

அதேபோல் 60 வயசுல இவங்க விண்வெளியில சாதனை செஞ்சிட்டு வந்துருக்காங்க. ஆனா நமக்கு 30 வயசுலயே பாடி பார்ட்ஸ் எல்லாம் ஆட்டம் காணுது என நெட்டிசன்ஸ் புலம்புகின்றனர்.

அது மட்டுமா அரசியல் விசுவாசிகள் இதில் சீமானையும் விட்டு வைக்கவில்லை. தங்கை சுனிதா வில்லியம்ஸ் என்னிடம் விண்வெளியில் பயிற்சி எடுத்துக் கொண்ட போது எடுத்த படம் என போட்டோ வைரல் ஆகி வருகிறது.

அதேபோல் சீமான் நாங்க விண்வெளியில் ஆமை கறி சாப்பிட்டோம் என சொல்வது போலவும் மீம்ஸ் ட்ரெண்டிங்கில் இருக்கிறது.

இப்படியாக இன்று சோசியல் மீடியாவில் சாதனை பெண் சுனிதா வில்லியம்ஸ் தான் பரபரப்பு செய்தியாக இருக்கிறார். அதில் நம்மை ரசிக்க வைத்த சில நகைச்சுவை மீம்ஸ் தொகுப்பு இதோ.

Advertisement Amazon Prime Banner