Pongal Memes: பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என கிராமப்புற ஊர்கள் எல்லாம் திருவிழா கோலம் தான்.
அதிலும் வீர விளையாட்டில் தொடங்கி பொங்கலுக்கு பல விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும். அதில் ஜல்லிக்கட்டு ஒரு புறம் இருக்க பெண்கள் குழந்தைகளுக்கான போட்டிகளும் கலைக்கட்டும்.
அதில் பல காமெடிகள் நடக்கும். அதே போல் பொங்கல் தினத்தில் நடக்கும் பெரிய காமெடியே பெண்கள் போடும் கோலம் தான்.
தங்களுடைய திறமையை காட்ட வேண்டும் என தைப்பொங்கலில் தொடங்கி காணும் பொங்கல் வரை விதவிதமாக வரைந்து தள்ளி விடுவார்கள்.
அதில் மாட்டுப் பொங்கல் கோலம் தான் வேற லெவலில் இருக்கும். அது மாடு தான் என்பதை கண்டுபிடிப்பதற்கு நமக்கு சில நிமிடங்கள் எடுக்கும்.
அதிலும் இப்போதெல்லாம் மாடு கன்றுடன் சேர்த்து கேஸ் சிலிண்டர் வைத்து பொங்கல் வைக்கும் கோலத்தையும் போடுகின்றனர். அதை நெட்டிசன்கள் இப்போது மீம்சாக பங்கம் செய்து வருகின்றனர்.
பீட்டா கிட்ட இருந்து மாட்டை எப்படியோ காப்பாத்திட்டோம். ஆனா இந்த கோலம் போடுற பொண்ணுங்க கிட்ட இருந்து காப்பாத்த முடியாது போல இருக்கே என பல மீம்ஸ் வைரலாகி வருகிறது.
இப்படி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நம்மை சிரிக்க வைக்கும் சில நகைச்சுவை மீம்ஸ் இதோ உங்களுக்காக.