Memes: நியூ இயர் கொண்டாட்டங்கள் முடிந்து பொங்கல் பண்டிகையை அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதிலும் இந்த வருடம் ஆறு நாட்கள் விடுமுறை கிடைக்கிறது.
பொதுவாக தீபாவளிக்கு ஊர்ப்பக்கம் செல்லாதவர்கள் கூட பொங்கலுக்கு பொட்டியை கட்டிக்கொண்டு கிளம்பி விடுவார்கள். அதே போல் ரேஷன் கடைகளில் இப்போதே கூட்டம் கூட ஆரம்பித்துவிட்டது.
இதற்கு முக்கிய காரணம் அரசு கொடுக்கும் பொங்கல் பரிசு தான். அத்துடன் ஆயிரம் ரூபாய் பணமும் கடந்த வருடம் கொடுக்கப்பட்டது. அதை எதிர்பார்த்தவர்களுக்கு இந்த வருடம் ஆப்பு தான்.
இந்த முறை பச்சரிசி கரும்பு வெள்ளம் உள்ளிட்ட பொருட்கள் மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கிறது. பணம் கொடுக்கப்படவில்லை. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இதை நெட்டிசன்களும் மீம்ஸ் போட்டு கிண்டல் அடித்து வருகின்றனர். அது மட்டும் இன்றி இப்போதைய அரசு எதிர்க்கட்சியாக இருந்தபோது கொடுத்த அறிக்கையும் வைரலாகி வருகிறது.
அதாவது முந்தைய ஆளும் கட்சி பொங்கலுக்கு 2500 பரிசு கொடுத்தனர். ஆனால் அது பத்தாது 5000 வேண்டும் என எதிர்க்கட்சி எதிர்ப்பு தெரிவித்தது.
அதை இப்போது குறிப்பிடும் மக்கள் ஆயிரம் கொடுக்காதது கூட பிரச்சினை இல்லை. ஆனால் 2500 பத்தாது ஐயாயிரம் கொடுக்கணும்னு சொன்னது மட்டும் மறக்கவே மாட்டோம்.
இப்படியாக பல மீம்ஸ் ட்ரெண்டாகி வருகிறது அதன் தொகுப்பு இதோ.