Memes: மார்ச் மாதம் வந்தாலே பொது தேர்வு தான் நினைவுக்கு வரும். அதில் இந்த வருடம் பிளஸ் டூ மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்கி இருக்கிறது.

கிட்டத்தட்ட 8,21,057 மாணவ மாணவியர் இந்த தேர்வினை எழுதுகின்றனர். இதற்காக தேர்வு மையங்கள் சிறப்பாக அமைக்கப்பட்டு மின்சாரம் தடையில்லாமல் கிடைக்கவும் வழிவகை செய்யப்பட்டிருந்தது.

இன்று தமிழ் பரீட்சை தொடங்கிய நிலையில் வரும் 25ஆம் தேதி வரை இந்த தேர்வு நடைபெற உள்ளது. இதனால் மாணவர்கள் தேர்வு பயத்தில் இருக்கின்றனர்.

இது ஒரு பக்கம் இருக்க இன்று காலையிலேயே அரசியல் பிரபலங்கள் அனைவரும் மாணவ மணிகளுக்கு வாழ்த்துக்களை கூறியிருந்தனர்.

அதே சமயம் பொது தேர்வை வைத்து பல மீம்ஸ் ட்ரெண்டில் இருக்கிறது. வருஷா வருஷம் பப்ளிக் எக்ஸாம் வருது.

ஆனால் மீடியாக்காரங்க பெண்கள் எக்ஸாம் எழுதறத மட்டும் போட்டோ புடிச்சு போடுறாங்க. பசங்க போட்டோவ போடவே மாட்டீங்களா என பல நக்கல் மீம்ஸ் பரவி வருகிறது. அதன் தொகுப்பு இதோ.
