வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

மறுபடியும் மழை வரணும்னு வேண்டுறீங்க இயற்கை ஆர்வலரா நீங்க.. ரெயின் கோட் விக்கிறவன்டா நானு, வைரல் மீம்ஸ்

Memes: சென்னையில் இந்த வாரம் முழுவதும் கனமழை இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நீங்க நினைச்சப்ப எல்லாம் என்னால வர முடியாது என வருண பகவான் ஆந்திரா பக்கம் சென்று விட்டார்.

memes-rain
memes-rain

அவரை நம்பி 10 நாட்களுக்கு தேவையான காய்கறி, ஸ்னாக்ஸ், பழங்கள் என வாங்கி போட்ட மக்கள் இப்போது நொந்து போய் இருக்கின்றனர். வாங்கி வச்ச மரியாதைக்காக ஒரு ரெண்டு நாளாவது வந்திருக்கலாம்ல என்பது தான் அவர்களுடைய மைண்ட் வாய்ஸ்.

memes-rain
memes-rain

இது ஒரு பக்கம் இருக்க ரெட் அலர்ட் கொடுத்ததால் நிச்சயம் நம்ம வியாபாரம் பிச்சிக்கும் என குடை ரெயின் கோட் விற்பவர்கள் எல்லாம் ஆவலுடன் காத்திருந்தனர். இதில் எக்ஸ்ட்ரா சரக்கை வேறு வாங்கி போட்டு காத்திருந்தவர்களும் உண்டு.

memes-rain
memes-rain

ஆனால் இப்போது வாங்கி வச்சதை எல்லாம் எப்படி விற்கப் போகிறோம் என்ற கவலையில் அவர்கள் இருக்கின்றனர். இதில் மீண்டும் மழை வர வேண்டும் என்ற வேண்டுதலும் ஒரு பக்கம் நடக்கிறது.

memes-rain
memes-rain

அதேபோல் காலை நேரத்தில் லேசான தூறல் வந்தாலே சிறு பிள்ளைகள் நியூஸ் சேனலை போட்டுக் கொண்டு லீவ் விடுவார்களா என ஒரு பக்கம் அட்ராசிட்டி செய்து வருகிறார்கள். அவர்களை பிடித்து ஸ்கூலுக்கு அனுப்புவது பெற்றோர்களுக்கு பெரும் பாடாக உள்ளது.

memes-rain
memes-rain

இப்படி சென்னை மழை நினைத்தது ஒன்று நடந்தது ஒன்னு என்ற கதையாக இருக்கிறது. இதை நெட்டிசன்கள் வழக்கம் போல நகைச்சுவை மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர். அப்படி இணையத்தை கலக்கும் சென்னை மழை மீம்ஸ் இதோ உங்களுக்காக.

memes-rain
memes-rain

Trending News