Memes: இன்று ரம்ஜான் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த ஒரு மாதமாக நோன்பு இருந்த இஸ்லாமியர்கள் இன்றைய தினத்தை கொண்டாடி வருகின்றனர்.

இதற்காகவே காத்திருந்த நம் மக்கள் இப்போது ரம்ஜான் வாழ்த்துக்களை தெறிக்க விட்டு வருகின்றனர். அதேபோல் பிரியாணி வருமா வராதா என காலையிலேயே வாசலை பார்ப்பவர்களும் உண்டு.

அது மட்டுமா முஸ்லிம் நண்பனுக்கு போன் செய்து வாழ்த்து சொல்லும் சாக்கில் பிரியாணி ரெடியா என விசாரிக்க ஆரம்பித்து விட்டனர். இன்னும் சிலர் பாய் நல்லா இருக்கீங்களா, வீட்டுல எல்லாரும் சௌக்கியமா என பிரியாணிக்கு பிட்டு போடுகின்றனர்.

இப்படி சோசியல் மீடியாவில் பிரியாணி மீம்ஸ் வைரலாகி வருகிறது. பிறையெல்லாம் நல்லா தெரியுதா பாய், பிறை தெரியுது ஆனா நீ தான் யாருன்னு தெரியல.

இன்னும் அடுப்பே பத்த வைக்கல இவனுங்க தொல்லை தாங்கலையே. இந்த வருஷம் பிரியாணி கேட்க ஒரு முஸ்லிம் பிரண்டு கூட இல்லையே.

நீ தீபாவளி பொங்கலுக்கு ஏதாவது கொடுத்தா தானடா அவன் பிரியாணி தருவான் என பல மீம்ஸ் ட்ரெண்டிங்கில் இருக்கிறது.

அப்படி ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கும் சில பிரியாணி மீம்ஸ் இதோ உங்களுக்காக.