Memes: பெண்களுக்கு பிடித்த கலர் என்ன என்று கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு பிங்க் என்று சொல்லிவிடலாம். இதை யாரை கேட்டாலும் சொல்வார்கள்.
அந்த அளவுக்கு லிட்டில் பிரின்சஸ் அனைவரும் இந்த கலரை விரும்புகின்றனர். அதேபோல் இந்த கலரில் உடை உணவு என எதையும் அவர்கள் விட்டு வைப்பதில்லை.
அந்த லிஸ்டில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது ரோஸ் மில்க். ஆனால் பெரும்பாலான ஆண்களுக்கு அது பிடிப்பதில்லை.
அப்படியே பிடித்தாலும் கமிட் ஆனவர்கள் காதலியுடன் இதை குடித்து என்ஜாய் செய்வார்கள். ஆனால் சிங்கிள் ஆண்கள் நண்பருடன் தான் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
அதேபோல் இந்த ரோஸ் மில்க்குக்கும் ஜெலுசிலுக்கும் கூட வித்தியாசம் தெரியாதவர்களும் உண்டு. மெடிக்கல் ஷாப்பில் நின்று கொண்டு ரோஸ் மில்க் எதுக்கு இங்க இருக்கு என குறுகுறுன்னு பார்த்தவர்களும் உண்டு.
இது பற்றிய மீம்ஸ் எப்போதுமே வைரல்தான். அப்படி ரோஸ்மில்க் ஜெலுசில் சம்பந்தப்பட்ட சில நகைச்சுவை மீம்ஸ் தொகுப்பு இதோ.