புதன்கிழமை, ஜனவரி 22, 2025

நல்லா இருக்க குடும்பத்த நாசமாக்க ஒருத்தி வருவா.. நாசமா போன குடும்பத்த நல்லாக்க ஒருத்தி வருவா, அவ்ளோதாங்க சீரியல்

Memes: காலம் காலமாக குடும்ப தலைவிகளின் ஒரே பொழுது போக்கு டிவி சீரியல் தான். ஆனால் 90 காலகட்டத்தில் வந்த சீரியல்களுக்கும் இப்போதும் ஏகப்பட்ட வித்தியாசம் இருக்கிறது.

அப்போதெல்லாம் சீரியல்களில் வெரைட்டியான கதை இருக்கும். ஆனால் இப்போது எல்லா சேனல்களிலும் ஒரே கதை தான் உருட்டுகின்றனர்.

ஒரு சீரியல் ஹிட்டாகிவிட்டால் போட்டி சேனலில் அதே மாதிரி ஒரு சீரியல் வந்துவிடும். உதாரணத்திற்கு செம்பருத்தி சீரியலில் ஹீரோயின் வீட்டு வேலை செய்பவராக இருப்பார்.

அதேபோல் விஜய் டிவியில் ராஜா ராணி சீரியல் வந்தது. இப்படி பல உதாரணங்கள் இருக்கிறது. அது மட்டும் இன்றி எல்லா சீரியல்களிலும் ஹீரோயினுக்கு தான் முக்கியத்துவம் இருக்கும்.

அவருக்கு ஒரு வில்லி இருப்பார். குடும்பத்தை கெடுக்க வரும் கேரக்டரை ஹீரோயின் ஓட ஓட விரட்டுவது தான் கதையாக இருக்கும்.

அதுவும் இல்லை என்றால் இரண்டு பொண்டாட்டி கதை, அண்ணன் தம்பி கதை என இருக்கும். ஆனால் இதையும் ஆர்வத்தோடு பார்ப்பவர்களும் உண்டு.

இன்னும் சில சீரியல்களில் கதையே இருக்காது. ஆனால் வருஷக் கணக்கில் ஓடும். இதை நெட்டிசன்களும் கலாய்த்து வருகின்றனர். அப்படி சில மீம்ஸ் தொகுப்பு இதோ.

Trending News