Memes: சண்டே வந்தாலே எல்லோருக்கும் கொண்டாட்டம் தான். சனிக்கிழமை இரவு நாளைக்கு நல்லா ரெஸ்ட் எடுக்கலாம் என குதூகலமாக இருக்கும்.

அதேபோல் ஞாயிற்றுக்கிழமை லேட்டாக எழுந்து அசைவ உணவுகளை ஒரு வெட்டு வெட்டி மீண்டும் தூக்கம் என என்ஜாய் செய்வோம்.

ஆனால் இரவு வந்தால் போதும் அய்யோ நாளைக்கு வேலைக்கு போகணுமா என சிறு பிள்ளைகள் போல் பயம் வந்துவிடும். அந்த அளவுக்கு திங்கட்கிழமை என்றாலே எல்லோருக்கும் அலர்ஜி தான்.

பள்ளி குழந்தைகள் கூட சனி ஞாயிறு முடிஞ்சு திங்கட்கிழமை ஸ்கூலுக்கு போகணுமா என கதற ஆரம்பித்து விடுவார்கள். இப்படி எல்லோரையும் டென்ஷன் ஆக்கும் பெருமை திங்கட்கிழமைக்கு உண்டு.

சண்டே மட்டும் இல்லைனா ஊருக்குள்ள பாதி பேரு பைத்தியமா தான் திரியனும். ஞாயிற்றுக்கிழமை இன்னும் நான் ரெஸ்ட் எடுக்கவே இல்லை.

அதுக்குள்ள நாளைக்கு வேலைக்கு போகணுமா. இம்சைக்கு பொறந்த மன்டே பயலே என பல மீம்ஸ் சோசியல் மீடியாவை சுற்றி வருகிறது. அதன் தொகுப்பு இதோ.