Memes: ஞாயிற்றுக்கிழமை வந்துவிட்டாலே எல்லார் வீட்டிலும் சிக்கன், மட்டன், மீன் என கமகமக்கும். இதற்காகவே காலையில் இருந்து பட்டினியாக கிடந்து ஒரு வெட்டு வெட்டுவோம்.

அதேபோல் ஞாயிற்றுக்கிழமை என்றாலே சனிக்கிழமை தூக்கமே வராது. லேட்டா எந்திரிச்சு ரிலாக்ஸா வேலைய பார்க்கலாம் என தோன்றும்.

வேலைக்கு செல்பவர்களுக்கு இந்த ஒரு நாள் மட்டும் இல்லை என்றால் பைத்தியமே பிடித்து விடும். ஆனால் இந்த நாள் வர்றதும் தெரியாது போறதும் தெரியாது.

அதேபோல் இன்னும் சிலருக்கு மறுநாள் வேலைக்கு போகணுமே என்ற கடுப்பு ஞாயிற்றுக்கிழமை சாயங்காலமே வந்துவிடும்.

இது ஒரு வகை என்றால் ஞாயிற்றுக்கிழமை விரதம்னு சொல்லி அம்மா சாம்பார் சாதம் போட்டால் வரும் பாருங்க ஒரு கோபம். வடிவேலு ஸ்டைலில் அந்த வேதனை இருக்கே.

இப்படி ஞாயிற்றுக்கிழமையில் நடக்கும் அலப்பறைகள் ஏராளம். அது சோசியல் மீடியாவில் மீம்சாக பரவி வருகிறது.

கோடி ரூபாய் கொடுத்தாலும் ஒரு விஷயத்தை பண்ண மாட்டேன். அதுல ஒன்னு தான் ஞாயிற்றுக்கிழமை சாம்பார் சாப்பிடுறது. நீதானே வஞ்சிரம் ஞாயிற்றுக்கிழமை வந்தா கொஞ்சிரோம்.
இப்படி பல மீம்ஸ் இணையத்தை கலக்கி கொண்டிருக்கிறது. அப்படி நம்மை சிரிக்க வைக்கும் சில மீம்ஸ் இதோ.