Memes: திருப்பதி லட்டு விவகாரம் தான் இப்போது தேசிய அளவில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. அதிலும் சைவ பக்தர்கள் அதிர்ச்சியில் கோமாவுக்கு செல்லாத குறையாக இருக்கின்றனர்.
திருப்பதி தேவஸ்தானத்தில் பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்கப்படும் லட்டுவில் மாட்டுக் கொழுப்பு, மீன் எண்ணெய் ஆகியவை கலந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. கோவிலில் ஒரு நாளைக்கு மட்டுமே மூன்று லட்சம் லட்டுக்கள் தயார் செய்யப்படுகின்றன.
இதற்காக 42 ஆயிரம் கிலோ நெய் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அதில் விலங்குகளின் கொழுப்பை கலந்து கலப்படம் செய்திருப்பது பொதுமக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு எதிராக தற்போது கருத்துக்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது.
இது ஒரு புறம் இருக்க நெட்டிசன்கள் வழக்கம் போல் இதையும் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர். அதிலும் மாட்டு கொழுப்பில் செய்த லட்டு கிட்னி, லிவர், ஹார்ட்டுக்கு நல்லது என கிண்டல் அடித்து வருகின்றனர்.
அதேபோல் சைவ மக்களை கலாய்க்கும் வகையில் திருப்பதிக்கு போயிட்டு வர்றவங்க எல்லாருமே அசைவம் தான். மாட்டுக் கொழுப்பில் செய்த லட்டே இவ்வளவு டேஸ்டா இருக்கு அப்ப மாட்டு இறைச்சி எவ்வளவு நல்லா இருக்கும் என லந்து செய்து வருகின்றனர். அதன் தொகுப்பை இது.