Memes: என்ன இருந்தாலும் எங்க காலம் மாறி வருமா என 90s கிட்ஸ் பெருமையாக சொல்வதுண்டு. அதில் முக்கியமான விஷயம் இளையராஜாவின் பாடல்கள் தான். பயணம் செய்வதில் தொடங்கிய சோகமாக இருந்தால் கூட அதைக் கேட்டு ஆறுதல் படுத்திக் கொள்ளும் ரசிகர்களும் உண்டு.
ஆனால் இப்போது வரும் பாடல்கள் மனதில் ஓட்டுவதே கிடையாது. அதிலும் கடும் இரைச்சலை வாரி இறைத்து பதட்டத்தை உருவாக்கி விடுகிறது சில பாடல்கள். ஆனால் 80 90 கால கட்டங்களில் வெளிவந்த பாடல்கள் இப்போது ட்ரெண்டாக மாறி வருகிறது.
அதுதான் இளையராஜா தேவா ஏ ஆர் ரகுமான் ஆகியோரின் வெற்றி. இப்போது பல இசையமைப்பாளர்கள் இருந்தாலும் டாப் நடிகர்களின் படங்களை பொருத்தவரையில் அனிருத் தான் முதல் சாய்ஸ்.
அவரும் இருக்க நாலு டியூனை வைத்துக் கொண்டு உருட்டி ஏதாவது ஒரு பாடலை போட்டு விடுகிறார். ஆனால் அது ரசனைக்கு மிகக் குறைவு தான் என்பது ரசிகர்களின் கருத்து. ஏனென்றால் அவருடைய பாடல்கள் அதிகப்படியான சத்தத்தோடு தான் இருக்கும்.
அதிலும் தலைவர் படம் என்றால் சிஷ்யனுக்கு ஏக குஷி ஆகிவிடும். பேக்ரவுண்டில் சூப்பர் ஸ்டாருடா ஒன் அண்ட் ஒன்லி யாருடா, தலைவரு அலப்பறை என பாட ஆரம்பித்து விடுவார். அதில் நேற்று வேட்டையன் படம் வெளியாகி இருக்கிறது.
அதற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. அதே போல் பத்து நிமிடத்திற்கு ஒருமுறை சூப்பர் ஸ்டாருடா என அனிருத் குரல் ஒலிப்பது உச்சகட்ட பொறுமையை சோதித்து இருக்கிறது. இதை மீம்ஸ் கிரியேட்டர்கள் கலாய்த்து வருகின்றனர்.
அதில் நாலு அனிருத் பாட்டை தொடர்ந்து கேட்டுவிட்டு ஐந்தாவதாக இளையராஜா பாட்டை கேட்டுப் பாருங்கள். ரைஸ் மில்லில் கரண்ட் போனால் எப்படி ஒரு அமைதி இருக்குமோ அப்படி இருக்கும் என்ற மீம்ஸ் வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது. அப்படியான நகைச்சுவை தொகுப்பு இதோ.