வியாழக்கிழமை, பிப்ரவரி 13, 2025

படத்துல பாதி நேரம் பொண்டாட்டிய தேடுனா அது கபாலி.. படம் முழுக்க தேடுனா அது விடாமுயற்சி, ட்ரெண்டிங் மீம்ஸ்

Memes: அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் லைக்கா தயாரிப்பில் விடாமுயற்சி கடந்த வாரம் வெளியானது. பல வருடங்களாக தாமதமாகி வந்த இப்படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர்.

அதேபோல் படம் வெளியான அன்று அஜித் வெறியர்கள் தியேட்டர்களை ரணகளம் செய்தனர். சோசியல் மீடியாவிலும் பாசிட்டிவ் விமர்சனங்கள் வரத் தொடங்கியது.

ஆனால் போகப் போக படம் ட்ரோல் மெட்டீரியலாக மாறியது. படத்தில் அஜித்துக்கு எந்த மாஸ் காட்சிகளும் கிடையாது.

படம் முழுக்க மனைவியை தேடி அலைவார். இதை சந்திரமுகி வடிவேலு பொண்டாட்டியை தேடும் காமெடியை போல் ட்ரோல் செய்து நெட்டிசன்கள் கிண்டலடித்து வந்தனர்.

அதேபோல் பல மீம்ஸ் இப்போது வைரலாகி வருகிறது. படத்துல பாதி நேரம் பொண்டாட்டியை தேடி அலைஞ்சா அது கபாலி.

அதுவே படம் முழுக்க தேடி அலைஞ்ச அதுதான் விடாமுயற்சி. இவ்ளோதாங்க விமர்சனம் என மீம்ஸ் ட்ரெண்டாகி கொண்டிருக்கிறது.

அப்படி சோசியல் மீடியாவை கலக்கிக் கொண்டிருக்கும் சில மீம்ஸ் தொகுப்பு இதோ.

Trending News