Memes: இந்த வருட முதல் நாள் அஜித் ரசிகர்களுக்கு சோதனையாக அமைந்துவிட்டது. இப்படி ஒரு ட்விஸ்ட்டை யாரும் எதிர்பார்க்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
இரண்டு வருடங்களாக இழுத்தடித்து வந்த விடா முயற்சி 2025 பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிப்பு வந்தது. இதனால் ரசிகர்கள் பயங்கர கொண்டாட்டத்தில் இருந்தனர்.
இந்த பொங்கல் விடாமுயற்சி பொங்கல் என சோசியல் மீடியாவில் அலப்பறை செய்து வந்தனர். ஆனால் திடீரென படம் பொங்கலுக்கு வராது என லைக்கா அறிவித்துவிட்டது.
இதனால் கடுப்பான ரசிகர்கள் லைக்காவை நல்லாவே இருக்க மாட்ட அப்படின்னு சாபம் கொடுக்க தொடங்கிவிட்டனர். இன்னும் சில நெட்டிசன்கள் இதை மீம்சாக கிண்டல் அடித்து வருகின்றனர்.
பேசாம அந்த ஒரு பாட்டையும் ஆல்பம் சாங் சொல்லிட்டு படத்தை டெலிட் பண்ணிடுங்க. இனிமே நீ விடாமுயற்சி இல்ல வெளியிட முயற்சி போன்ற மீம்ஸ் வைரலாகி வருகிறது.
அப்படி விடாமுயற்சி தொடர்பாக சோசியல் மீடியாவை கலக்கி கொண்டிருக்கும் சில மீம்ஸ் இதோ உங்களுக்காக.