Memes: அஜித் ரசிகர்கள் பல வருடங்களாக எதிர்பார்த்த நாள் வந்துவிட்டது. நாளை பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விடாமுயற்சி வெளியாகிறது.
லைக்கா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கியிருக்கும் இப்படத்திற்காக அஜித் பல ரிஸ்க் எடுத்து இருந்தார். அந்த வீடியோக்கள் கூட மீடியாவில் வைரலானது.
அதேபோல் இப்படத்தில் அஜித் இளமையாக இருக்கும் லுக்கும் ஆடியன்ஸை கவர்ந்துள்ளது. இதனாலேயே அஜித் தரிசனத்திற்காக ரசிகர்கள் மரண வெய்ட்டிங்கில் உள்ளனர்.
அதேபோல் படத்தின் டிக்கெட் புக்கிங் ஆரம்பித்ததுமே அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து விட்டது. மேலும் அஜித்தை வாழ்த்தி சோசியல் மீடியாவில் பல மீம்ஸ் வைரலாகி வருகிறது.
விடாமுயற்சி டிக்கெட் இல்ல தரிசன சீட்டு என்பதில் தொடங்கி யாராவது கருணை உள்ளத்தோடு எனக்கு ஒரே ஒரு டிக்கெட் வாங்கி தாங்க என ஒரே அலப்பறை தான்.
அதேபோல் விஜய் ரசிகர்கள் கூட விடாமுயற்சிக்கு வாழ்த்து தெரிவித்து போஸ்டர் அடித்து ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
இப்படி சோசியல் மீடியாவில் தற்போது வைரலாகி கொண்டிருக்கும் விடாமுயற்சி மீம்ஸ் தொகுப்பு இதோ.