கால் பெருவிரலில் இசையமைத்த அனிருத்.. படத்த கூட பார்க்கிறோம் விட்டுடுங்கடா, விடாமுயற்சி ரிவ்யூ அலப்பறை மீம்ஸ்

memes
memes

Memes: விடாமுயற்சி படம் பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு நேற்று ஒரு வழியாக வெளியாகிவிட்டது. ரசிகர்களும் இதை ஆரவாரமாக கொண்டாடி தீர்த்தனர்.

சோசியல் மீடியாவில் படம் பற்றிய பாசிட்டிவ் கமெண்ட்களும் பரவ தொடங்கியது. அதிலும் விஜய்யை எதிர்க்கும் அரசியல் புள்ளிகளின் இணைய கைக்கூலிகள் ஆஹா ஓஹோ என புகழ்ந்து தள்ளினார்கள்.

அதே சமயம் படத்தை பார்த்தவர்கள் கலாய்த்து தள்ளி மீம்ஸ் போட்டு வருகின்றனர். இது எல்லாமே இன்றைய ஹாட் டாப்பிக்காக உள்ளது.

அதேபோல் சில சினிமா விமர்சகர்கள் கொடுக்கும் ரிவ்யூ பார்க்கும்போது சிரிப்பை அடக்க முடியவில்லை. அப்படித்தான் பிரபல யூடியூபர் விடாமுயற்சியை புகழ்ந்து பேசி இருந்தார்.

அதில் அவர் அனிருத் பற்றி சொன்னது தான் ஹைலைட். கால் பெருவிரலில் கூட மியூசிக் போட்டு விட்டார் என அவர் அதிகபட்சமாக புகழ்ந்து தள்ளி இருந்தார்.

இதை பார்த்த நெட்டிசன்கள் எல்லாம் ஒரு அளவுக்கு தான். இப்படியும் கூட ஒரு விமர்சனமா. நாங்க படத்தை கூட போய் பாக்குறோம். தயவு செய்து எங்கள விட்டுட்டு என நக்கல் அடித்து வருகின்றனர்.

இப்படி இணையத்தை கலக்கி கொண்டிருக்கும் சில விடா முயற்சி மீம்ஸ் தொகுப்பு இதோ.

Advertisement Amazon Prime Banner