Diwali Memes: பண்டிகை காலம் தொடங்கிவிட்டது. ஆயுத பூஜை தீபாவளி என அடுத்தடுத்து விழாக்கள் தான். அதில் அனைவரும் இப்போது தீபாவளி பர்ச்சேஸ், ஆபீஸ் போனஸ் என பிஸியாக இருக்கின்றனர்.
இதில் இல்லத்தரசிகள் விதவிதமான ஆடைகளை ஒரு பக்கம் வாங்கி குவித்து வருகின்றனர். அதே சமயம் யூடியூப் சேனல்களை பார்த்து புதுப்புது பலகாரங்களை செய்வது எப்படி என இறங்கியுள்ளனர்.
இன்னும் சிலர் ஆபீஸில் போனஸ் கிடைக்குமா தீபாவளிக்கு எவ்வளவு செலவாகும் என்ற யோசனையில் இருக்கின்றனர். இதை மீம்ஸ் கிரியேட்டர்கள் நகைச்சுவையாக பதிவிட்டு வருகின்றனர்.
அதில் தீபாவளிக்கு எந்த பிளானும் கிடையாது திண்டாடுரவனுக்கு கொண்டாட்டமா என்ற மீம்ஸ் வைரலாகி வருகிறது. அதே போல் எப்படி இருந்தாலும் தீபாவளி அன்னைக்கும் நைட்டி தான் போட போற அப்புறம் எதுக்கு 10 புடவை வாங்குற என கணவன்மார்களின் மைண்ட் வாய்ஸ் மீம்ஸ் ட்ரெண்ட் ஆகி வருகிறது. அதன் தொகுப்பு இதோ.
சோசியல் மீடியாவில் வைரலாகும் மீம்ஸ்
- மீன், கறி கடையில விலையும் குறையல கூட்டமும் குறையல
- நானே விசிட் விசால போய் வேலை கிடைக்காம வந்துருக்கேன்
- பாடம் நடத்துறது P.E.T பீரியட்ல