Memes: சோசியல் மீடியா புழக்கம் அதிகமாகிவிட்ட நிலையில் தினம் தினம் புதுப்புது விஷயங்கள் ட்ரெண்ட் ஆகிறது. அப்படித்தான் ஒரே நாளில் வைரலானார் மோனலிசா.
இவர் வேறு யாரும் கிடையாது மகா கும்பமேளாவில் பாசிமணி விற்க வந்த பெண் தான். காந்த கண்களை கொண்ட இந்த கருப்பு நிற அழகி தான் இப்போதைய ட்ரெண்டிங்.
திடீரென யாருடா இந்த பொண்ணு பாசிமணி விக்குது என சில இளசுகள் கண்ணில் இவர் பட்டிருக்கிறார். அவ்வளவுதான் உடனே அவருடைய போட்டோ வைரலாக ஆரம்பித்தது.
அதைத்தொடர்ந்து நேஷனல் மீடியாக்கள் எல்லாம் மைக்கை தூக்கிக்கொண்டு அவரை சுற்ற ஆரம்பித்து விட்டனர். ஆரம்பத்தில் இதை ஜாலியாக எடுத்துக் கொண்ட அந்தப் பெண் போக போக கண்ணீர் விட்டு கதற ஆரம்பித்துவிட்டார்.
அந்த அளவுக்கு நம் மக்கள் செல்பி எடுக்கிறேன் என்ற பெயரில் அந்த பெண்ணை டார்ச்சர் செய்ய ஆரம்பித்து விட்டனர்.
இதனால் அவருடைய அப்பா நீ பாசி வித்தது போதும் என மகளை பஸ் ஏற்றி ஊருக்கே அனுப்பிவிட்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
இது ஒரு பக்கம் இருக்க இந்த பெண்ணின் போட்டோவை பார்த்த பாலிவுட் இயக்குனர் ஒருவர் தன் படத்தில் ஹீரோயின் ஆக அவரை கமிட் செய்திருக்கிறார். இதுதான் இப்போதைய ஹாட் டாப்பிக்.
பாசிமணி விற்க வந்த இடத்துல ஒரு ஹிந்தி படம் தேறுச்சு என இதை நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அப்படி இணையத்தை கலக்கும் மோனலிசா மீம்ஸ் இதோ.