Memes: கடந்த சில நாட்களாகவே சோசியல் மீடியாவில் திடீர் தளபதியை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். எல்லாம் பராசக்தி ரிலீஸ் செய்தியை பார்த்த பிறகு தான்.

சிவகார்த்திகேயன் நடித்து வரும் இப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பொங்கலுக்கு வெளியாகும் என தற்போது தெரியவந்துள்ளது.

இதை தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் சோசியல் மீடியாவில் நாசுக்காக பதிவிட்டுள்ளார். அதற்கு சில நாட்கள் முன்புதான் விஜயின் ஜனநாயகன் பொங்கல் ரிலீஸ் என அறிவிப்பு வந்தது.

உடனே இப்படி ஒரு செய்தி என்றால் இதில் இருக்கும் அரசியலை எல்லாராலும் புரிந்து கொள்ள முடிகிறது. ஏனென்றால் பராசக்தி படத்தை வெளியிடுவது ரெட் ஜெயன்ட் நிறுவனம்.

ஆக அரசியல் பகையை சினிமாவிலும் காட்டார் தொடங்கி விட்டார்கள் என விஜய் ரசிகர்கள் ஒரு பக்கம் கொந்தளித்து வருகின்றனர். மற்றொரு பக்கம் சிவகார்த்திகேயனையும் விட்டு வைக்கவில்லை.

வேணா தேவையில்லாம ரிஸ்க் எடுக்குறீங்க. சுதா கொங்கரா படம் இதுவரைக்கும் பிளாப் ஆனதே இல்ல. ஆனா நாங்க பிளாப் ஆக வைப்போம்.

கடைசி படம் பிரச்சனை இல்லாம பார்க்கலாம்னு பார்த்தா ஆடு தானா பிரியாணிக்கு வருது என பல மீம்ஸ் வைரலாகி வருகிறது.
இதில் கடைசி நேரத்தில் பராசக்தி பின்வாங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. எது எப்படியோ அடுத்த வருட பொங்கல் தரமான சம்பவமாக இருக்கப் போகிறது.
இப்படியாக சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் ஜனநாயகன் vs பராசக்தி மீம்ஸ் இதோ உங்களுக்காக.